பேராதனை நகரில் பாலத்துக்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு ஒருவர் உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், மண்சரிவில் நான்கு வர்த்தக நிலையங்களும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட வர்த்தக நிலையமொன்றில் தங்கியிருந்த 68 வயதான ஒருவரே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, பதுளை – கொழும்பு பிரதான வீதியின் பலாங்கொடை – பம்பஹின்ன பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
இதன்காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.