அமெரிக்கக் கடற்படையின் கண்காணிப்பு விமானம் ஒன்று ஓடுபாதையைத் தவறவிட்டு கடலில் இறங்கியுள்ளது.
அந்தச் சம்பவம், ஹவாய் தீவில் இடம்பெற்றுள்ளது.
அந்த P-8A Poseidon விமானம் அங்குள்ள மரீன் கார்ப்ஸ் தளத்தில் தரையிறங்கவிருந்தது.
சுமார் 275 மில்லியன் டொலர் மதிப்பிலான அந்த விமானம் கண்காணிப்பு தகவல் திரட்டப் பயன்படுத்தப்படுகிறது.
வாஷிங்டன் மாநிலத்தில் இருக்கக்கூடிய அந்த விமானம் வழக்கமான பயிற்சிக்காக ஹவாயிக்கு அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானத்தில் இருந்த 9 பேருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்றது BBC செய்தி வெளியிட்டுள்ளது.
சம்பவம் நடந்தபோது மேக மூட்டமாக இருந்ததாகவும் மழையும் பெய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் எதையும் தெளிவாகப் பார்க்கமுடியவில்லை என்று விமானி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விமானம் கடல் பகுதியில் இறங்கியதால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து அங்குள்ள மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அதாவது, நீரில் விமான எரிபொருளும் மற்ற நச்சுப்பொருள்களும் வெளியாகியிருப்பதை மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.