இஸ்ரேலுடனான தற்காலிக மோதல் நிறுத்தத்தை மேலும் இரண்டு நாள் நீட்டிக்க ஹமாஸ் உடன்பாடு செய்துகொண்டுள்ளது.
காஸாவில் உள்ள பிணையாளிகளை விடுவிப்பது குறித்த புதிய பட்டியலைத் தயாரித்து வருவதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான நான்கு நாள் சண்டை நிறுத்தம் முடிவடையும் நிலையில் அதை மேலும் நீட்டிப்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி – 4 நாட்கள் போர் நிறுத்தம் – இஸ்ரேல் அறிவிப்பு
மோதல் நிறுத்த உடன்பாட்டுக்கான நிபந்தனைகளில் மாற்றம் இல்லை என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.
மேலும், இரண்டு நாள்களுக்குச் சண்டை நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்துக் கத்தாருடனும் எகிப்துடனும் உடன்பாட்டை எட்டியிருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
அந்த இரண்டு நாடுகளும் சமரச முயற்சியில் பங்காற்றி வருகின்றன.