இந்தியாவில் இயற்கை வளங்கள் மிகுந்த மாநிலமாக கேரளா திகழ்கிறது.
மக்கள்தொகை பெருக்கத்திலும் அது பெரிய மாநிலமாகவே இருந்தது. 2011இல் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 33 மில்லியன் மக்களுடன், மக்கள்தொகையில் 13ஆவது பெரிய மாநிலமாக கேரளா இருந்தது.
இந்நிலையில், தற்போது அங்கு குழந்தை பிறப்பு வீதம் கடும் சரிவை சந்தித்துள்ளமை தெரியவந்துள்ளது.
கேரளா மாநிலத்தில் 2011ஆம் ஆண்டு குழந்தைகள் பிறப்பு வீதம் அதிகரிப்பு பெரிய அளவில் இருந்தது. அந்த ஆண்டில் அங்கு 5 இலட்சத்து 60 ஆயிரத்து 268 குழந்தைகள் பிறந்துள்ளன.
ஆனால், அதன்பிறகு குழந்தைகள் பிறப்பு வீதம் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. 2019ஆம் ஆண்டு 4 இலட்சத்து 80 ஆயிரத்து 113 குழந்தைகளே பிறந்துள்ளன.
2021ஆம் ஆண்டில் 4 இலட்சத்து 19 ஆயிரத்து 767 குழந்தைகளே பிறந்துள்ளன.
2011ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2021ஆம் ஆண்டில் 1 இலட்சத்து 40 ஆயிரத்து 501 குழந்தைகள் குறைவாக பிறந்துள்ளன. இது 25 சதவீதம் குறைவாகும்.
கடந்த 10 ஆண்டுகளில் கேரளாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பிறக்கும் குழந்தைகள் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.