பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் மத்தியப் பகுதியில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஜெர்மானியர் ஒருவர் கொல்லப்பட்டார்.
காயமடைந்த மற்றொருவருக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஐஃபல் கோபுரத்துக்கு (Eiffel Tower) அருகிலுள்ள Quai de Grenelle வட்டாரத்தைக் கடந்துசெல்பவர்களைக் குறிவைத்து அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகப் பிரான்ஸ் உள்துறை அமைச்சு தெரிவித்தது.
கத்திக்குத்து தாக்குதல் நடத்திய 26 வயது இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தை அடுத்து Bir-Hakeim சுரங்க ரயில் நிலையத்தின் சுற்றுவட்டாரத்தில் பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறது.
அந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.