பிலிப்பீன்ஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலுக்கு ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர்.
மராவி நகரில் உள்ள பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சிக் கூடத்தில் சம்பவம் நடந்தது.
வாரயிறுதிப் பிரார்த்தனைக் கூட்டத்திற்காகப் பெற்றோரும் மாணவர்களும் கூடியிருந்தனர்.
குண்டுவெடிப்பைக் கண்டித்த வட்டார ஆளுநர் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவர் எனச் சூளூரைத்தார்.
தனது வளாகத்தில் சமயக் கூட்டத்தின்போது வெடிப்பு நிகழ்ந்தது அதிர்ச்சியளிப்பதாகப் பல்கலைக்கழகம் குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்தி : பிலிப்பீன்ஸில் பல்கலைக்கழகத்தில் குண்டுவெடிப்பு; மூவர் மரணம்