இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் இருக்கும் மெராப்பி எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து 11 மலையேறி வாசிகள் உயிரிழந்துள்ளனர்.
மீட்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரி ஒருவர் அந்தத் தகவலை AFP செய்தி நிறுவனத்திடம் இன்று (4 ) தெரிவித்தார்.
நேற்று (3 டிசெம்பர்) அந்த எரிமலை வெடித்ததில் 3,000 மீட்டர் உயரத்திற்கு சாம்பல் வெளியானது.
அந்தப் பகுதியிலிருந்து 26 பேர் இன்னும் வெளியேற்றப்படவில்லை என்று மீட்புக் குழுவின் தலைவர் தெரிவித்தார்.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 14 பேரில் 3 பேர் உயிருடன் உள்ளனர். ஏனைய 11 பேரும் சடலங்களாகவே மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமையிலிருந்து அந்த மலைக்கு மொத்தம் 75 மலையேறிகள் சென்றதாகக் கூறப்பட்டது.
அவர்களில் 49 பேர் மலையிலிருந்து கிழே இறங்கிவிட்டதாகவும் 12 பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
கண்டுபிடிக்கப்பட்டவர்களில் சிலருக்கு தொடர்ந்து மருத்துவச் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
மூலம் – AFP