தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை (29) தொடங்க இருக்கிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த சுமார் 7 இலட்சத்து 25 ஆயிரம் பேர் தேர்வெழுத உள்ளனர்.
தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட பரீட்சை மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வினாத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு வருவதற்கும், விடைத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு சென்று வைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
தேர்வு மையங்களில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை பிடிக்க 3 ஆயிரத்து 200 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிவறை வசதிகள் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டு உள்ளதுடன், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
தேர்வறைக்குள் அலைபேசி கொண்டுவர தடை விதிக்கப்பட்டு உள்ளது.