கலிபோர்னியா கடற்கரையில் சால்மன் மீன்களைப் பிடிக்க 2ஆவது வருடமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
வறட்சி மற்றும் காட்டுத்தீ போன்றவற்றால் மீன்களின் பெருக்கம் குறைந்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால், சால்மன் மீன்பிடித் துறையை நம்பியிருக்கும் 23,000 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழ்நிலை காணப்படுகின்றது.
இந்த நிலையில், கலிபோர்னிய மீன் மற்றும் வனவிலங்குத் துறை அறிவித்துள்ள இந்தத் தடை, சால்மன் மீன்களின் உற்பத்தி பெருக வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வெப்பமடைதல் காரணமாகக் கலிபோர்னியா, கடந்த 20 ஆண்டுகளாக வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால், சால்மன் மீன்கள் இனவிருத்தி செய்வதில் சிக்கலை எதிர்நோக்குகின்றன.
கலிபோர்னியாவில் சால்மன் மீன்கள் அதிகம் உற்பத்தியாகும் பகுதியில் கடந்த ஆண்டு வெறும் 6,100 சால்மன் மீன்கள் மட்டுமே இருப்பது கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.