செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் ஸ்பெயின் மின்வெட்டு சம்பவத்தால் ரூ.15,000 கோடி நட்டம்!

ஸ்பெயின் மின்வெட்டு சம்பவத்தால் ரூ.15,000 கோடி நட்டம்!

1 minutes read

ஸ்பெயினில் கடந்த இரு தினங்களுக்கு முன் வரலாறு காணாத அளவில் மின்வெட்டு ஏற்பட்டது.

இந்த திடீர் மின்வெட்டு காரணமாக தலைநகர் மாட்ரிட் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது.

இதனால் நாட்டில் உள்ள மின்சார ரயில் சேவை, செல்போன் சேவைகள், விமான சேவைகள் உட்பட போக்குவரத்து மற்றும் தொழில்நுட்ப சேவைகள் இணைத்தும் முடங்கின.

மின்சாரம் இல்லாததால், மாட்ரிட் டென்னிஸ் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இரவு வரை நீடித்த இந்த மின்வெட்டு காரணமாக முழு நாடும் இருளில் மூழ்கியது.

இந்த மின் வெட்டு பாதிப்பு அண்மைய நாடுகளான பிரான்ஸ் மற்றும் போர்ச்சுகலிலும் உணரப்பட்டது. சுமார் 24 மணி நேரத்திற்கு பிறகு அங்கு மின்வெட்டு சீரமைக்கப்பட்டது.

இந்நிலையில், வரலாறு காணாத இந்த மின்வெட்டு காரணமாக ஸ்பெயின் அரசுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 15,000 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளது.

இது அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.1 சதவீதம் ஆகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.