பொதுமக்களுக்கு ஆபத்து மற்றும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய 7 நபர்களை கைது செய்துள்ளதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
400க்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகள் முன்னெடுத்த பயங்கரவாத முறியடிப்புச் சோதனைகளின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 7 நபர்களுக்கும் சிட்னி தேவாலயத்தில் நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் தொடர்புள்ளதாகக் அவுஸ்திரேலிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அவர்கள் தாக்குதலைத் திட்டமிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
இதேவேளை, அங்குள்ள தேவாலயத்தில் பேராயரைக் குத்தியதாக 16 வயது சிறுவன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட அனைவரும் சிறுவர்கள் என்று கூறப்படுகின்றது.