இந்திய பொதுத் தேர்தலில், இந்தியாவின் வடமேற்கு மாநிலமான பஞ்சாபைச் சேர்ந்த சிறைக்கைதி ஒருவர் வெற்றிபெற்றுள்ளார்.
அம்ரித்பால் சிங் (வயது 31) சீக்கியப் பிரிவினைவாதத் தலைவர். இவர் பஞ்சாபில் கதூர் சஹீப் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு 400,000 வாக்குகள் பெற்றார்.
வெற்றியைத் தொடர்ந்து அவரைச் சிறையில் இருந்து விடுவிக்குமாறு குடும்பத்தார் வலியுறுத்துகின்றனர்.
அவர் தற்போது அஸ்ஸாம் மாநிலத்தில் உயர் பாதுகாப்புமிக்கச் சிறையில் இருக்கிறார். அவர் கடந்த ஆண்டு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டதாகவும் ஆயுதங்கள் ஏந்தி பொலிஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியபோது அவர் கைது செய்யப்பட்டார் என்றும் Reuters தகவல் வெளியிட்டுள்ளது.
இவர் தேர்தலில் வெற்றிபெற்றதால் பஞ்சாபில் பிரிவினைவாதத்தை மக்கள் ஆதரிக்கின்றனர் என்று அர்த்தமல்ல என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
பஞ்சாபில் பிரிவினைவாதம் மக்களிடையே பிரபலமாக இல்லை என்றும் அவர்கள் கூறினர்.