அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன், மத்திய கிழக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது முதலில் எகிப்துக்கும் பிறகு இஸ்ரேலுக்கும் அவர் பயணிக்கவுள்ளார்.
கடந்தாண்டு ஒக்டோபர் மாதம் போர் தொடங்கிய பின்னர் மத்திய கிழக்கு அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மேற்கொள்ளும் 8ஆவது விஜயம் இதுவாகும்.
இஸ்ரேலில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் பிளிங்கனின் பயணம் போர் நிறுத்தத்தில் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா மேற்கொள்ளும் அமைதி முயற்சியில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு.
எகிப்தியத் தலைநகர் கைரோவில் அந்நாட்டு ஜனாதிபதி அப்துல் ஃபாத்தா அல்-சிசியை அவர் சந்திக்கவுள்ளார்.
கைரோ பயணத்தை முடித்துக்கொண்டு பிளிங்கன் ஜெருசலம் பயணிக்கவுள்ளார். அங்கு அவர் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.