செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா திடீரென நடுவானில் குலுங்கிய விமானம் – 30 பயணிகள் காயம்

திடீரென நடுவானில் குலுங்கிய விமானம் – 30 பயணிகள் காயம்

0 minutes read

ஸ்பெயினில் இருந்து உருகுவேக்கு புறப்பட்ட ஏர் ஐரோப்பா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென குலுங்கியது.

இதில் சில பயணிகள் முன்னால் உள்ள இருக்கைகள் மீது மோதி காயமடைந்தனர்.

விமானத்தின் சில பாகங்கள் உடைந்த நிலையில், விமானி கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்ட நிலையில், பிரேசிலில் தரையிறங்க விமானிக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதன்பேரில் பிரேசிலில் உள்ள நடால் விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறங்கியது. மீட்பு குழுவினர் பயணிகளை அவசர அவசரமாக வெளியேற்றினர்.

மேலும், படுகாயம் அடைந்த 30 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அத்துடன், வேறு விமானம் மூலம் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

325 பயணிகளுடன் பயணித்த விமானத்தில் ஏற்படவிருந்த பெரும் அசம்பாவிதம் விமானியின் சாமர்த்தியத்தால் தவிர்க்கப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More