இங்கிலாந்தைச் சேர்ந்த சாரா பேக்வூட் மற்றும் கனடாவைச் சேர்ந்த பிரெட் கிலிபரி ஆகிய தம்பதி, அட்லாண்டிக் கடலில் படகுப் பயணம் மேற்கொண்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் மரணித்து 6 வாரங்களின் பின்னரே கனடாவில் உள்ள Sable தீவில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக BBC அறிக்கையிட்டுள்ளது.
நோவா ஸ்கோஷியாவில் புறப்பட்ட குறித்த தம்பதி, சுமார் 3,228 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் The Azores எனும் பகுதிக்குச் சென்றுகொண்டிருந்தனர். அப்பயணம் 21 நாள்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், அவர்களது தொடர்பு துண்டிக்கப்பட்டமையால், அவ்விருவரையும் கடந்த மாதம் 18ஆம் திகதி முதல் காணவில்லை என அறிவிக்கப்பட்டது.
அவர்கள் பயணித்த சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் பயணம் செய்யக்கூடியது ‘Theros’ எனும் உல்லாசப் படகைக் கைவிட்ட பிறகு மரணித்துள்ளதாக நம்பப்படுகிறது.
தம்பதியின் மரணம் குறித்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.