புகழ்பெற்ற Mangrove புகைப்பட விருது விழாவில் வெற்றியாளராக இந்தியர் ஒருவர் தெரிவாகியுள்ளார்.
கடும் புயலில் சிக்கி உயிர்பிழைத்த சிறுமியைப் படம்பிடித்த சுப்பிராதிம் பட்டாச்சார்ஜி என்பவரே இவ்வாண்டின் Mangrove புகைப்பட விருது விழாவில் வெற்றியாளராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அவர், அந்தச் சிறுமியை இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் சுந்தரவனக் காட்டில் படம் பிடித்ததாக BBC செய்தி வெளியிட்டுள்ளது. “புகைப்படத்தில் சிறுமி புயலில் சேதமைடைந்த தமது வீட்டிற்கு முன் நிற்பதைக் காணலாம். இக்கட்டான நிலைமையில் சிறுமியின் முகத்தில் வலிமையும் அமைதியும் தெரிந்தன” என்று பட்டாச்சார்ஜி தெரிவித்துள்ளார்.
Mangrove புகைப்பட விருது விழா, இவ்வாண்டு 10ஆவது முறையாய் நடத்தப்பட்டதாகவும் வன விலங்குகள், கடலோரப் பகுதிகள், சதுப்புநிலக் காடு மற்றும் கடல் பல்லுயிர்ச் சூழல் ஆகியவற்றிற்கு இடையே இருக்கும் தொடர்பைக் காட்டும் நோக்கத்தில் இந்த விழா நடத்தப்படுவதாகவம் BBC குறிப்பிட்டுள்ளது.