கனடா, நூனவட் (Nunavut) பகுதியில் இரண்டு பனிக்கரடிகள் தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
கனடா அராசங்கத்தின் சார்பில் ரேடார் தற்காப்புத் தளங்களை இயக்கும் தளவாட நிறுவன ஊழியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த ஊழியரை இரண்டு பனிக்கரடிகளும் தாக்கியபோது ஏனைய ஊழியர்கள் அவருக்கு உதவ முயற்சித்துள்ளனர். இதன்போது அவர்கள் ஒரு பனிக்கரடியைக் கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்தச் சம்பவம் எவ்வாறான சூழ்நிலையில் நடந்தது என்பதைப் பற்றிய விசாரணை நடைபெறுவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, பனிக்கரடிகள் மனிதர்களைத் தாக்குவது மிகவும் அரிது என்றும் கடந்த ஆண்டு அமெரிக்காவின் அலாஸ்கா மாநில கிராமமொன்றில் வசித்த பெண்ணும் அவரது ஒரு வயதுப் பையனும் பனிக்கரடி தாக்கியதில் உயிரிழந்துள்ளனர் என்றும் BBC செய்தியில் குறிப்பிட்டுள்ளது.