இந்திய பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானிக்கு அமெரிக்கப் பங்குச் சந்தை ஆணையம் அழைப்பாணை விடுத்துள்ளது.
அத்துடன், அதானியின் உறவினர் சாகர் அதானிக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதானி நிறுவனம், இலஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை ஒட்டிப் பங்குச் சந்தை ஆணையம் இந்த அழைப்பு விடுத்துள்ளது.
மின்சார விநியோக ஒப்பந்தங்களைப் பெற அதானி குழுமம், இந்திய அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டொலர் இலஞ்சம் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு கூறுகிறது.
ஆணையத்தின் அழைப்புக்கு அதானி குழுமம், 21 நாளுக்குள் பதில் சொல்ல வேண்டும்.
எனினும், அதானி குழுமம் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. இக்குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று அதானி குழுமம் கூறியுள்ளது.
Adani Green Energy செய்த ஓர் ஒப்பந்தம் தொடர்பில் அமெரிக்காவில் குற்றஞ்சாட்டு பதிவாகியிருப்பதாக குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி கூறினார்.
அது அதானி குழுமத்தின் 10 சதவீதத்தை மட்டுமே பிரதிநிதிப்பதாக அவர் தெரிவித்தார். குழுமத்தின் மற்ற எந்தப் பகுதியும் குற்றஞ்சாட்டப்படவில்லை என்றும் அவர் கூறினார்.