காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக பொலிவியா கடற்படை புதிதாக மனித உருவ ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்த மனித உருவ ரோபோக்கு “Erizo” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தீ ஏற்பட்ட பகுதிக்கு அதனை நேரடியாகக் கொண்டுசெல்ல முடியும். 3.8 டன் எடை வரை தண்ணீரைச் சுமக்கும் ஆற்றல் அக்கருவிக்கு உண்டு.
பொலிவியாவில் இந்த ஆண்டு செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் கடும் தீச்சம்பவங்கள் ஏற்பட்டன. குறைந்தது 10 மில்லியன் ஹெக்டர் பரப்பளவு காடு தீயில் அழிந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட இச்சம்பவம் தேசியப் பேரிடராக அறிவிக்கப்பட்டது.
அதன் சேதங்களைக் கருதி, காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த உதவும் மனித உருவ ரோபோவை பொலிவியா கடற்படை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.