தென்கொரியா விமான விபத்தில் உயிரிழந்தோரின் சடலங்களை குடும்பத்தாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக Jeju Air விமான விபத்தில் உயிரிழந்தோரின் உடல்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்தது. இதற்காக அந்தப் பணியை மேற்கொள்ளும் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், DNA பரிசோதனைகளை விரைந்து செய்ய கூடுதல் ஆய்வாளர்களும் வரவழைக்கப்பட்டனர்.
விமான விபத்து நடந்த இடத்தில் உள்ளூர் விசாரணை அதிகாரிகளுக்கு அமெரிக்கத் தேசியப் போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியத்தின் இரு நிபுணர்கள் உதவி வழங்கினார். Boeing நிறுவன அதிகாரிகளும் கூடவே இருந்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) ஏற்பட்ட Jeju Air விபத்தில் 179 பேர் உயிரிழந்தனர். இதில் பயணிகள் அனைவரும் உயிரிழந்தனர். விமான ஊழியர்கள் இருவர் மாத்திரமே உயிர் பிழைத்தனர்.
விமானம் பேங்காக்கிலிருந்து (Bangkok) தென் கொரியாவுக்குப் பயணித்துக்கொண்டிருந்த போது, முவான் (Muan) விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட வேளை சுவரில் மோதி தீப்பிடித்தது.