பாலிவுட் பிரபல நடிகர் சய்ஃப் அலி கான் மீர் 6 முறை கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மும்பை – பாந்த்ரா பகுதியில் இருக்கும் அவரது வீட்டுக்குள் கொள்ளையடிக்கச் சென்ற நபரைத் தடுக்க முயற்சி செய்தபோது, அவர் தாக்கப்பட்டதாக த இந்து ஊடகம் தெரிவித்தது.
தற்போது அவர் மும்மையில் அவரது வீட்டுக்கு அருகே உள்ள லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2 கத்திக்குத்துக் காயங்கள் ஆழமாக ஏற்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது. அதில் ஒன்று முதுகெலும்புக்கு அருகில் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர் தெரிவித்தார்.
இன்று (16) அதிகாலை 2.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர், நடிகரின் வீட்டுக்குள் புகுந்ததாக இந்து நாளேடு தெரிவித்தது.
தாக்குதல் சம்பவம் பற்றி விசாரிக்க மும்பை பொலிஸார் 7 பேர் கொண்ட சிறப்புக் குழுவை நியமித்திருக்கிறது.