குஜராத் சூரத் மாவட்டத்தில் உள்ள பிஸ்கட் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் நேற்று இரவு தீ ஏற்பட்டது.
போர்சாரா கிராமத்தில் உள்ள இந்த தொழிற்சாலைக்கு 7 தீயணைப்பு வாகனத்துடன் தீயணைப்பு வீர்கள் விரைந்தனர்.
சுமார் 12 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
அங்கு வைக்கப்பட்டிருந்த டிரம்களில் எரியக்கூடிய திரவம் இருந்த நிலையில், தீயின் தாக்கம் பெரியதாக இருந்தது என கூறப்படுகிறது.
தொழிற்சாலையில் பெரும் பகுதி முற்றிலும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.