கனடாவில் உள்ள டொராண்டோ பியர்சன் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் உயிர் பிழைத்துள்ளதாக விமான நிலையத்தின் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார்.
“உயிர் இழப்பு மற்றும் ஒப்பீட்டளவில் பெரிய காயங்கள் ஏற்படவில்லை” என்று விமான நிலைய தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒரு குழந்தையும் இரண்டு பெரியவர்களும் படுகாயமடைந்துள்ளதாக அவசர சேவைகள் தெரிவிக்கின்றன.
திங்களன்று டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 80 பேரில் 18 பேர் காயமடைந்தனர்.
விமானத்தில் பயணித்த ஒருவர் வெளியிட்ட வீடியோவில், “நாங்கள் டொராண்டோவில் இருக்கிறோம். நாங்கள் இப்போதுதான் இறங்கினோம். எங்கள் விமானம் விபத்துக்குள்ளானது. இது தலைகீழாக உள்ளது, ” என்று மூச்சுத் திணறலுடன் விளக்கினர்.