கனடா மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் மார்க் கார்னி, அந்நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்கவிருக்கிறார்.
இவர் இங்கிலாந்து மற்றும் கனடாவிலும் உள்ள மத்திய வங்கிகளின் முன்னாள் ஆளுநராக கடமையாற்றியுள்ளார்.
கனடாப் பிரதமராக இருக்கும் ஜஸ்ட்டின் ட்ரூடோ, இரண்டு மாதங்களுக்கு முன் பிரதமர் பொறுப்பிலிருந்து விலகினார்.
இதனையடுத்து கனடாவை ஆளும் மிதவாதக் கட்சியின் வாக்கெடுப்பில் கார்னி வெற்றிபெற்றார். பதற்றம் அதிகரிக்கும் வேளையில், அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப்பை சமாளிக்கப் பொருத்தமானவர் யார் என்பதற்கான வாக்கெடுப்பாக அது கருதப்படுகிறது.
புதிய தலைவர் குறுகிய காலமே பொறுப்பில் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக கனடிய ஊடகங்கள் கூறுகின்றன.
ஒக்டோபர் மாதம் கனடாவில் பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. ஆனால், அதற்கு முன்பே தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
இரண்டு வாரத்தில் நாடாளுமன்றம் கூடவேண்டும். அப்போது எதிர்த்தரப்பினர் சிறுபான்மை அரசாங்கமான ஆளும் மிதவாதக் கட்சிக்குத் தேர்தல் நடத்தச் சொல்லி நெருக்குதல் கொடுக்கலாம் என்று தெரிகிறது.