லிபரல் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மைக் கார்னி, கனடாவின் பிரதமராக இன்று வெள்ளிக்கிழமை (14) காலை பதவியேற்கின்றார் என கனடா கவர்னர் ஜெனரல் அலுவலகம் குறிப்பிட்டது.
கனடாவின் 24ஆவது பிரதமராக இவர் இன்று பதவியேற்கின்றார்.
1965ஆம் ஆண்டு பிறந்த மார்க் ஜோசப் கார்னி இம்மாதம் 9ஆம் திகதி கனடா லிபரல் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டவர். கனடா பிரதம் அமைச்சர் ஜஸ்டின் துரூடோ பதவியிலிருந்து விலகியதை அடுத்து, மார்க் ஜோசப் கர்னியை கனடா லிபரல் கட்சி பிரதம அமைச்சராக தேர்வு செய்தது.
தொடர்புடைய செய்தி பதவி விலகும் போது தான் அமர்ந்த நாற்காலியையும் எடுத்துச் சென்ற ஜஸ்டின் ட்ரூடோ!
கனடா மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநராக சுமார் 10 ஆண்டுகளாக மார்க் கார்னி பதவி வகித்துள்ளார்.
இவர் அரசியலுக்குப் புதியவர் என்பதுடன், நாடாளுமன்றத்தில் இடம்வகிக்காதவர்.
இவ்வாண்டு ஒக்டோபர் மாதத்திற்குள் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் கார்னி மிதவாதக் கட்சிக்குத் தலைமை ஏற்க வேண்டும். எனினும், கருத்துக்கணிப்புகளில் கன்சர்வேட்டிவ் கட்சியைவிட மிதவாதக் கட்சி ஒரு சதவீதம் பின்தங்கியிருக்கிறது.
கனடாவில் தற்போதுள்ள அமைச்சரவையில் 37 உறுப்பினர்கள் உள்ளனர். கார்னி அதைப் பாதியாகக் குறைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.