பிரபல இசையமைப்பாளர் இசைப்புயல் A.R ரஹ்மான், (58 வயது) திடீர் நெஞ்சு வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை – அப்போலோ வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என India Today செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய நேரப்படி இன்று (16) காலை 7.30க்கு அவர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவருக்கு angiogram பரிசோதனை மேற்கொள்ளப்படலாம் என்றும் வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
மணிரத்தினம் இயக்கத்தில் 1992ஆம் ஆண்டு வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் A.R ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
தமிழ், இந்தி , ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர், “இசைப்புயல்” என அழைக்கப்படுகிறார்.
ஓஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது மற்றும் தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர்.