தெற்கு ஐரோப்பிய நாடான வடக்கு மாசிடோனியாவில் உள்ள இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 உயிரிழந்துள்ளதாக என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், 100 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
தலைநகர் ஸ்கோப்ஜேவிலிருந்து கிழக்கே 100 கிமீ தொலைவிலுள்ள கோக்கானி என்ற இடத்தில் பல்ஸ் கிளப்பில் இன்று (16) அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் இசை நிகழ்ச்சிக்காக அங்கு கூடியிருந்த ஏராளமனோர் விபத்தில் சிக்கினர்.
சம்பவத்தின் போது இசை நிகழ்ச்சியில் 1,500 பேர் இருந்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளமையால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இசைக் குழுவின் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோது, சில இளைஞர்கள் வாண வேடிக்கை சாதனங்களைப் பயன்படுத்தியதால் மேற்கூரை தீப்பிடித்து விபத்தானது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், மேடையில் இருந்து வெளிப்பட்ட பொறியால் கூரையில் தீப்பற்றி வேகமாக பரவும் காட்சிகளையும் உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.