1
G7 உச்சிமாநாடு, இம்முறை கனடாவில் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளுமாறு உக்ரைன் ஜனாதிபதிக்கு கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அழைப்பானது, உக்ரைனுக்கான கனடாவின் ஆதரவை வெளிப்படுத்துவதாக உள்ளது.
இதேவேளை, ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருகின்ற நிலையில், கனடா பிரதமரிடமிருந்து இந்த அழைப்பு வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.