3
வட ஆப்பிரிக்க நாடான டியுனிசியாவில் இருந்து சுமார் 60 அகதிகளுடன் இத்தாலி நோக்கி சென்ற படகு விபத்துக்கு உள்ளானதில் 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், 40-க்கும் மேற்பட்டோர் கடலில் மாயமானதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராட்சத அலை தாக்கி அந்த படகு நடுக்கடலில் கவிழ்ந்த நிலையில், கடலோர பொலிஸார் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மாயமானவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.