இங்கிலாந்தை சேர்ந்த பால் புரும் (வயது 55) என்பவர் தம்மை Snickers சாக்லெட் வடிவம் கொண்ட சவப்பெட்டியில் புதைக்குமாறு, உறவினர்களிடம் கேட்டிருந்தார்.
அவர் அதனைத் தமது உயிலிலும் எழுதியிருந்ததாக The New York Post குறிப்பிட்டுள்ளது.
மிகுந்த நகைச்சுவை உணர்வுகொண்ட பால் புரும் தனது இறுதி ஆசை குறித்து நண்பர்களிடமும் அடிக்கடி கூறிவந்துள்ளார்.
இந்நிலையில், அவரது மரணத்தைத் தொடர்ந்து அவரின் இறுதி ஆசையை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நிறைவேற்றியுள்ளனர்.
அதாவது, Snickers சாக்லெட்டை மையமாகக் கொண்டு, அவரது சவப்பெட்டி வடிவமைக்கப்பட்டு, அதில் I’m nuts!’ எனும் வார்த்தைகளும் பொறிக்கப்பட்டிருந்ததாக The New York Post தெரிவித்தது.
அதேவேளை, பால் புரூம், கிரிஸ்டல் பாலஸ் FC கால்பந்து அணியின் தீவிர ஆதரவாளராக, 40க்கும் மேற்பட்ட அணி ஜெர்ஸிகளை சேகரித்து, செல்ஹர்ஸ்ட் பார்க் மைதானத்தில் சகோதரர்களுடன் போட்டிகளை காண்பதை மிகவும் ரசித்தவர். அவரது சவப்பெட்டியில் அந்த அணியின் லோகோவும் பதிக்கப்பட்டிருந்தது.
மனநலம் குன்றியவர்களுக்கு உதவி செய்யும் பராமரிப்பு உதவியாளராக பால் புரூம் பணி புரிந்து வந்துள்ளார்.
புருமின் இறுதிச்சடங்கிற்குச் சென்றவர்கள் அவரது வாழ்க்கையை நன்றாகச் சித்திரிக்கும் வகையில் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகக் கூறினர். அவரின் இறுதி ஊர்வலத்தில், அவருடைய நண்பர்கள் அவரை நினைவுகூரும் வகையில் தனிப்பட்ட டி-ஷர்ட்களை அணிந்து, கைத்தட்டல்களுடன் அவரை வழி அனுப்பி வைத்தனர்.