செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் சிகிச்சை முடிந்தது; வைத்தியசாலையில் இருந்து போப் பிரான்சிஸ் வெளியேறினார்

சிகிச்சை முடிந்தது; வைத்தியசாலையில் இருந்து போப் பிரான்சிஸ் வெளியேறினார்

1 minutes read

கத்தோலிக்கச் சமயத் தலைவர் போப் பிரான்சிஸ் தனது சிகிச்சையை முடித்துக்கொண்டு, ரோம் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

நிமோனியா காய்ச்சல் காரணமாக கடந்த 5 வாரங்களாக சிகிச்சை பெற்றுவந்த போப் முதல்முறையாகப் பொதுமக்கள் முன்னிலையில் தோன்றினார்.

தம்மைக் காணத் திரண்டிருந்த மக்களைப் பார்த்து அவர் வைத்தியசாலை மாயிடியில் இருந்து கையசைத்தார்.

தொடர்புடைய செய்திகள் : தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸின் உடல்நலத்தில் முன்னேற்றம்

‘போர் அபத்தமாகத் தோன்றுகிறது’: மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் உருக்கம்!

பின்னர் கார் ஒன்றில் ஏறி, பொலிஸ் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் இருந்து போப் வெளியேறினார்.

வயதாகிவிட்டதால் போப் பிரான்சிஸ் முழுமையாகக் குணமடைய சற்றுக்காலம் பிடிக்கும் என்று அவரின் வைத்தியர் இதற்கு முன்னர் கூறியிருந்தார்.

எனவே, இன்றும் சுமார் 2 மாதங்களுக்கு வத்திக்கானில் போப் ஓய்வெடுப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More