செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ஏழை, ஆதரவற்ற குழந்தைகளின் பராமரிப்புக்கு வழங்கிய காணியில் அம்பானியின் வீடு; பறிமுதலாகும் தகவல்!

ஏழை, ஆதரவற்ற குழந்தைகளின் பராமரிப்புக்கு வழங்கிய காணியில் அம்பானியின் வீடு; பறிமுதலாகும் தகவல்!

1 minutes read

உலகிலேயே பக்ஹிங்காம் அரண்மனைக்கு அடுத்ததாக இரண்டாவது விலையுயர்ந்த வீடாக இருப்பது இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் அன்டிலியா வீடு.

இந்த வீடு சுமார் 4.5 இலட்சம் சதுர அடி பரப்பளவு கொண்டுள்ளது. இதன் தற்போதைய மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 15,000 கோடி பெறுமதியுடையது.

மும்பையில் உள்ள ஆடம்பர வீட்டில் 27 மாடிகள் உள்ளது. விரிவான உடற்பயிற்சி கூடம், ஒரு உலகத்தரம் வாய்ந்த மசாஜ் நிலையம் , ஒரு தனியார் தியேட்டர், மொட்டை மாடி தோட்டம், உட்புற நீச்சல் குளங்கள், அத்துடன் ஒரு கோவில் மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட உயர்மட்ட வசதிகளைக் கொண்டுள்ளது.

முகேஷ் அம்பானியின் இந்த அன்டிலியா வீடு, இந்தியாவில் வக்பு சீர்திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டமையால் பறிமுதலாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

முகேஷ் அம்பானியின் அன்டிலியா வீடு இருக்கும் நிலம், கோஜா சமூகத்தைச் சேர்ந்த ஏழை மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பராமரிப்பு மற்றும் கல்வியை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஒரு அறக்கட்டளை நிறுவனத்திற்கு சொந்தமானது.

கரீம் பாய் இப்ராஹிம் என்பவர் இந்த நிலத்தை வக்பு வாரியத்திற்கு தானமாக வழங்கியுள்ளார். ஒரு நிலம் வக்புக்கு கொடுக்கப்பட்டால், அது ஆதரவற்றவர்களுக்கும் வீடுகள் கட்டுதல் பாடசாலை கட்டுதல் போன்ற நோக்கங்களுக்காக எடுத்துக்கொள்ளப்படும் .

ஏப்ரல் 2002 இல், கரிம்போய் கோஜா அறக்கட்டளை, முகேஷ் அம்பானியுடன் தொடர்புடைய ஆன்டிலியா கொமர்ஷியல் பிரைவேட் லிமிடெட் (ACPL) நிறுவனத்திற்கு ரூ.21 கோடிக்கு விற்பனை செய்துள்ளது. அன்றுமுதல் இது அம்பானியின் நிலமானது. இந்த நிலத்தில்தான் தற்போது அம்பானியின் வீடு அமைந்துள்ளது.

ஏற்கெனவே, இது தொடர்பாக மகாராஷ்டிர சட்டப்பேரவையில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், வக்ப் வாரியத்துக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்தை தனியாருக்கு விற்க சட்டத்தில் இடம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

எனவே, இந்த நில விற்பனையின் சட்டப்பூர்வ அனுமதி குறித்து சந்தேகம் உள்ளது. இது தொடர்பாக கரீம் பாய் அறக்கட்டளை மற்றும் வக்ஃப் வாரியம் இணைந்து தீர்வு காண வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், ஏப்ரல் 5 ஆம் திகதி வக்பு வாரிய சீர்திருத்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டத்திருத்தமாக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், நிலுவையிலிருக்கும் வழக்கை நீதிமன்றம் விசாரித்து, இந்த நிலம் அம்பானிக்குச் சொந்தமில்லை என்று கூறினால் நிச்சயம் அவர்கள் வீட்டை இழக்கும் அபாயம் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More