குரோய்டனில் பெண் ஒருவரை கொலை செய்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர், நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
Croydon, Towpath Way பகுதியைச் சேர்ந்த 57 வயதான Earlston Bennet என்ற நபர் மீதே கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு முன்னதாக டவ்பாத் வேயில் உள்ள வீட்டுக்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டதை அடுத்து விசாரணை தொடங்கப்பட்டது.
அங்கு 58 வயதான பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இன்னும் முறையான அடையாளம் காணப்படாத நிலையில், அந்த பெண்ணுக்கு சாரா ரெனால்ட்ஸ் என்று அதிகாரிகள் பெயரிட்டுள்ளனர்.
அத்துடன், கடந்த வாரங்களில் சாராவுடன் தொடர்பு கொண்ட அல்லது பார்த்த எவருடனும் பேச ஆர்வமாக உள்ளனர்.
https://mipp.police.uk/operation/01MPS25X57-PO1 என்ற பிரத்யேக ஆன்லைன் போர்ட்டலைப் பயன்படுத்தி காவல்துறையைத் தொடர்புகொள்ளலாம்.
அல்லது, 0800 555 111 என்ற எண்ணில் க்ரைம்ஸ்டாப்பர்ஸ் என்ற சுயாதீன தொண்டு நிறுவனத்திற்கு அநாமதேயமாக தகவலை வழங்க முடியும்..