வடமேற்கு இலண்டனில் உள்ள துணை மின்நிலையத்திலிருந்து அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இலண்டன் தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.
மைதா வேலின் அபெர்டீன் பிளேஸில் உள்ள கட்டிடத்தின் கூரையில் தீ பரவியதை அடுத்து, சுமார் 80 குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தொடர்புடைய செய்தி : மேற்கு இலண்டனில் உள்ள துணை மின்நிலையத்தில் தீ விபத்து
யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை, இருப்பினும் உள்ளூர்வாசிகள் தங்கள் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடியே வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
இதேவேளை, துணை மின்நிலையத்தில் உள்ள ஒரு உபகரணத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக UK பவர் நெட்வொர்க்ஸ் தெரிவித்துள்ளது.