செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் மேற்கு இலண்டனில் உள்ள துணை மின்நிலையத்தில் தீ விபத்து

மேற்கு இலண்டனில் உள்ள துணை மின்நிலையத்தில் தீ விபத்து

0 minutes read

மேற்கு இலண்டனில் உள்ள துணை மின்நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Maida Vale உள்ள Aberdeen Place என்ற இடத்தில் சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், அருகில் இருந்த கட்டிடத்தின் கூரையும் எரிந்ததாக இலண்டன் தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, சுமார் 80 பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நகரின் வானத்தில் அடர்ந்த கறுப்பு புகை மூடியுள்ளதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள் காட்டுகின்றன.

இன்று செவ்வாய்க்கிழமை (29) அதிகாலை 5.30 மணி முதல் தீ விபத்து குறித்து 170க்கும் மேற்பட்ட அழைப்புகள் தீயணைப்புப் படையினருக்கு வந்த நிலையில், சுமார் 15 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

இதனையடுத்து, குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்கவும், முடிந்தவரை அந்தப் பகுதியை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.