இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு நேற்றுிரவு விசேட உரையாற்றியிருந்தார். தொலைக்காட்சி அது நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதன்போது பயங்கரவாதிகளை மோடி கடுமையாக எச்சரித்தார்.
இந்தியா மீது மேற்கொள்ளப்படும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இனி வலுவான பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் சூளுரைத்தார்.
இந்தியா – பாகிஸ்தான் மோதல் விவகாரம் உரையின் முக்கிய பேசு பொருளாக இருந்தது.
இரு நாடுகளுக்கும் இடையே கடந்த வாரம் நடந்த மோதலுக்குப் பின்னர் அவர் ஆற்றிய முதல் தொலைக்காட்சி உரை இதுவாகும்.
இரு நாடுகளுக்கும் இடையேயான பூசல் நிரை மேலும் மோசமடையும் பட்சத்தில் அணுவாயுதங்களைக் கொண்டு, மிரட்டும் பாகிஸ்தானின் போக்கைப் புதுடில்லி பொறுத்துக்கொள்ளாது என்றும் இந்தியப் பிரதமர் கூறினார்.
இதேவேளை, பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே அணுவாயுதப் போர் இடம்பெறவிருந்த நிலையில் அமெரிக்கா தலையிட்டுத் தடுத்ததாக அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.