அமெரிக்காவிடம் இருந்து அதிகூடிய விலைக்கு ஆயுதங்களைக் கொள்வனவு செய்கிறது சவுதி அரேபியா.
அதாவது, சுமார் 142 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள ஆயுதங்களை அமெரிக்காவிடம் இருந்து சவுதி அரேபியா வாங்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சவுதி அரேபியா தலைநகர் ரியாத் சென்றபோது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
வாஷிங்டன் இதுவரை செய்துள்ள மிகப்பெரிய தற்காப்பு ஒத்துழைப்பு உடன்பாடு அது என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.
அமெரிக்காவிடமிருந்து பெருமளவு ஆயுதங்கள் கொள்வனவு நாடுகளின் பட்டியலில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளது.
2017இல் சுமார் 110 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள ஆயுதங்களை சவுதி அரேபியாவுக்கு விற்கும் திட்டத்தைத் டிரம்ப் முன்மொழிந்தார். ஆனால், 2018 வரை 14.5 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள ஆயுதங்களே வழங்கப்பட்டுள்ளன.
எதிரியின் கண்காணிப்பைத் தவிர்க்கும் நவீனப் போர் விமானம் தேவை என்று சவுதி அரேபியா நீண்ட காலமாகக் காத்திருக்கிறது.
அமெரிக்கா அதற்கு ஒப்புதல் அளித்தால், இஸ்ரேலுக்குப் பிறகு F-35 போர் விமானங்களை இயக்கும் இரண்டாவது மத்திய கிழக்கு நாடாக சவுதி அரேபியா இருக்கும் என்று கூறப்படுகிறது.