மெக்சிகோவில் TikTok மூலம் பிரபலமாக அறியப்பட்டவர் 23 வயதுடைய வலரியா மார்க்கஸ் (Valeria Marquez).
அவர், TikTokஇல் அழகு மற்றும் வாழ்க்கைமுறை குறித்த வீடியோக்களை பகிர்ந்து வந்தார். வலரியா மார்க்கஸை TikTokஇல் பல ஆயிரம் பேர் பின்தொடர்ந்தனர்.
இந்நிலையில், TikTokஇல் நேரடியாக வலரியா மார்க்கஸ் அவரது இரசிகர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த வேளை, அவர் திடீரென சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், மெக்சிகோவில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
தொடர்புடைய செய்தி : மெக்சிகோ பிரசாரத்தில் பெண் மேயர் வேட்பாளர் சுட்டுக்கொலை!
குவாடலஜாரா நகரில் உள்ள அவரது சிகையலங்காரக் கடையில் நேற்று முன்தினம் (13) மார்க்கஸ் கொல்லப்பட்டார்.
கடைக்குள் புகுந்த ஓர் ஆண், அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக அரசாங்க வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்தது. கொலைக்கான காரணம் தெரியவில்லை.
அந்த ஆண், மார்க்கஸிற்கு அன்பளிப்புக் கொடுக்கச் சென்றதுபோல் நடித்ததாக மெக்சிகோ ஊடகங்கள் தகவல் தெரிவித்தன.
வீடியோ மூலம்: cnn (https://edition.cnn.com/2025/05/14/americas/valeria-marquez-tiktok-beauty-influencer-shot-dead-intl-latam)