நியூயோர்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மெஹ்மூத் குரேஷி அவர்கள் அங்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்
இந்தியாவுடனான பிரச்சனைகளை போரால் தீர்க்க முடியாது இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இரு நாடுகளும் அணு ஆயுத பலம் கொண்ட நாடுகளாக உள்ளன.
எனவே, போர் என்பது இருநாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைக்கு தீர்வாக அமையாது.
அமைதி முயற்சிகளுக்கு இந்தியா முன்வரும்பட்சத்தில் பாகிஸ்தான் அதனிலும் இருமடங்கு முனைப்புடன் செயற்படும் என பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.