உலகம் முழுவதுமே கொரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி விட்டதாகக் கூறி திரையரங்குகளைத் திறந்துவிடுள்ளது சீன அரசு.
கடந்த டிசம்பர் மாதத்தில் பரவத்தொடங்கிய கொரொனா வைரஸ் பரவலைப் பிப்ரவரி மாதத்துக்குள் கட்டுக்குள் கொண்டுவந்தது சீனா. பிப்ரவரிக்குப் பிறகு தினமும் ஒற்றை இலக்கத்திலும் இரட்டை இலக்கத்திலும் மட்டுமே கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.
கொரோனா வைரஸை சீனா கட்டுக்குள் கொண்டுவந்த இதே காலகட்டத்தில் தான் உலகில் கொரோனா வைரஸ் அதி வேகமாக பரவத் தொடங்கியது. அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகளில் வைரஸ் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றன. நாளுக்கு நாள் வைரஸ் தாக்கம் அதிகமாகி, உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே போகிறது.
இந்த நிலையில், நோய்த் தாக்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்திய சீன அரசு தற்போது திரையரங்குகளைத் திறந்துவிட்டுள்ளது. நோய் தொற்று குறைவாகக் காணப்படும் ஷாங்காய், ஹங்சோயு, குய்லின் ஆகிய நகரங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. 14 நாள்கள் கொரோனா நோய்த்தொற்று பதிவு செய்யப்படாத பகுதிகளில் திரையரங்குகளைத் திறக்கப்பட்டுள்ளன. சமூக இடைவெளியுடன் கடைபிடிப்பவர்கள் மாஸ்க் அணிந்த ரசிகர்கள் மட்டுமே திரையரங்குக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
நீண்ட நாள்களுக்குப் பிறகு திரையரங்கங்கள் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் திரையரங்குக்கு வந்து, செல்பி எடுத்து மகிழ்ச்சியுடன் படங்களைப் சமுக வலைத்தளங்களில் செல்ஃபிகளை பகிர்ந்து வருகிறார்கள். உலகளவில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக திரையரங்குகள் மூலம் அதிக வருவாயை ஈட்டும் சீன அரசு, கொரோனா தாக்கத்தால் 32,000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரசால் உலகம் முழுவதும் 1.45 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறு லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.