தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான இளையராஜா, மணிரத்னம் இவர்கள் இரண்டு பேருக்குமே ஜுன் 2ம் தேதி தான் பிறந்தநாள்!
இவர்களது பிறந்தநாளில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய திரைப்படங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
1. பகல் நிலவு
1985 ம் ஆண்டு ஜுன் 5ம் தேதி பகல் நிலவு திரைப்படம் வெளியானது.
முரளி, ரேவதி, சத்யராஜ் முக்கிய வேடங்களில் நடித்த இந்த படத்தின் வெற்றிக்கு பெரும் பின்னணி சேர்த்தது இளையராஜாவின் இசை தான் !
2. மௌனராகம்
1986 ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி மௌனராகம் திரைப்படம் வெளியானது.
மோகன், கார்த்திக், ரேவதி நடிப்பில் வெளியான இந்த படம், புதுமண ஜோடிகளின் விவாகரத்தை பற்றி பேசினாலும், மௌன ராகம் படத்திற்கான ப்ளாஸ் பேக் காதல் கதை, இளையராஜாவின் இசையில் துள்ளளாக இருக்கும்.
அதே நேரம், மோகன் – ரேவதி உறவிலும் இளையராஜாவின் இசை, ஆழ்மனதுக்குள் ஊடுறுவும்.
3. நாயகன்
1987ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி நாயகன் திரைப்படம் வெளியானது.
கமல் ஹாசன், சரண்யா, ஜனகராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இந்த படம் இன்றளவும் புகழப்படுகிறது.
மும்பை கதைக்களத்தில் உருவான இந்த படத்தில் நடிக்கும் கமலின் மூன்று வேடங்களுக்கும் வெவ்வேறு விதமான இசையை கொடுத்திருப்பார் இளையராஜா.
IN4NET (Dot Com for Information)
இந்த இசை, இன்றளவும் தமிழ் சினிமாவில் மணிரத்னம், இளையராஜா கூட்டணிக்கு சிறந்த முன்னுதாரணமாக காண்பிக்கப்படுகிறது.
4. அக்னி நட்சத்திரம்
1988ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி அக்னி நட்சத்திரம் திரைப்படம் வெளியானது.
பிரபு, கார்த்திக், அமலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இந்த படத்தின் இசை இளையராஜாவின் கை வண்ணத்தில் உருவானது.
மணிரத்னம் இயக்கிய மிக முக்கியமான திரைப்படங்களில் இதுவும் ஒன்று. இன்றளவும் ரீமெக்கிற்கு பேசப்படுகிறது.
5. தளபதி
1991 ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி ரஜினிகாந்த் நடிப்பில் தளபதி திரைப்படம் வெளியானது.
ரஜினிகாந்துடன், மம்மூட்டி, அரவிந்த் சாமி, சோபனா ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்த படத்திற்கான காட்சிகள் அனைத்தும் ரயிலோசையை வைத்தே பின்னப்பட்டிருக்கும்.
இந்த காட்சிகளிலும் சரி , பின்னணி இசையிலும் சரி, பாடல்களிலும் சரி , இளையராஜாவின் இசைக்கு லட்சக்கணக்கான ரஜினி ரசிகர்கள் அடிமையானார்கள்.
மணிரத்னம் இளையராஜா கூட்டணில அதிகம் பேசப்பட்ட இந்த 5 திரைப்படங்கள் இவங்களுடைய காம்பினேசன லெஜெண்டரியா காண்பிச்சிக்கிட்டு இருக்குங்குறது சந்தேகமில்ல.
நன்றி : in4net.com