உலகில் போட்டித்தன்மை மிக்க பொருளாதாரத்தைக் கொண்ட முன்னணி நாடு என்ற நிலையை மீண்டும் சிங்கப்பூர் கைப்பற்றியிருக்கிறது.
2020ஆம் ஆண்டுக்குப் பிறகு 4 இடங்கள் முன்னேறி சிங்கப்பூர் மீண்டும் முதலிடத்துக்கு வந்துள்ளது.
சுவிட்சர்லந்து மற்றும் டென்மார்க் ஆகியன முறையே 2ஆம் மற்றும் 3ஆம் இடங்களைப் பெற்றுள்ளன.
அப்பட்டியலில் மொத்தம் 67 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
பட்டியலில் சரிந்த மலேசியா
இதேவேளை, இவ்வாண்டு உலகில் போட்டித்தன்மை மிக்க பொருளாதாரத்தைக் கொண்ட முன்னணி நாடுகளின் தரவரிசையில் மலேசியா 7 இடங்கள் சரிந்துள்ளது. அதாவது மலேசியாவுக்கு 34ஆவது இடமே கிடைத்துள்ளது.
அதேவேளை, ஆசிய பசிபிக் வட்டாரத்தில் உள்ள 14 நாடுகள் தரவரிசையில் மலேசியா 4 இடங்கள் சரிந்து 10ஆவது இடத்தில் உள்ளது.
பொருளியல் வளர்ச்சி, அரசாங்கத்தின் செயல்திறன் மற்றும் வர்த்தகச் செயல்திறன் என மலேசியா கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளிலும் சரிவைச் சந்தித்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், உள்கட்டமைப்பு வளர்ச்சியில் முன்னேற்றம் காணப்படுகிறது.