ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ தீவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
ஹொக்கைடோ தீவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் பெருமளவானோர்கள் காணாமல் போயுள்ளதாகவும், அவர்கள் கட்டட இடிபாடுகளுக்குள் அகப்பட்டிருக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்தும் இரவு பகலாக இடம்பெறுவதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நில அதிர்வு காரணமாக ஹொக்கைடோ தீவில் உள்ள 16 லட்சம் மக்கள் மின்சார விநியோகமற்ற நிலையில் உள்ளதுடன், பல வீதிகளில் போக்குவரத்து செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த ஜூன் மாதம் இடம்பெற்ற பிறிதொரு நில அதிர்வில் 5 பேர் கொல்லப்பட்டு 300 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.