கொரோனா வைரஸால் இதுவரை UKயில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளாகி UKயின் 177 வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 15,100 நோயாளிகள் பற்றிய தகவல்களை திரட்டி அவர்களது வயது, பாலினம், உடல் ஆரோக்கியம் அடிப்படையில் ஒரு ஆய்வை அண்மையில் லண்டன் இம்பீரியல் கல்லூரி ( Imperial College London ) மற்றும் லிவர்பூல் ( Liverpool ) , எடின்பேர்க் ( Edinburgh ) பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.
அப்போது, பெரும்பாலான கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 120 கிலோவுக்கும் அதிகமான எடையை கொண்டிருந்தது, தெரிய வந்தது. மேலும், இவர்கள் சிறியளவில் மட்டுமே நார்ச்சத்துள்ள உணவு பொருட்களை சாப்பிட்டு வந்துள்ளனர் என்பதும், நோய் எதிர்ப்பு சக்தி தரும் மரக்கறி, பழங்களை குறைந்தளவில் உண்டு வந்திருக்கின்றனர் என்பதும் கண்டறியப்பட்டது. அதாவது, இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்து காணப்பட்டதால் கொரோனா வைரஸ் எளிதில் இவர்களை தாக்கியுள்ளது. ஏற்கனவே, மூச்சுத்திணறல் பிரச்சினை கொண்ட இவர்களின் நுரையீரலை கொரோனா வைரஸ் ஊடுருவி தாக்கிவிட்டது, என்பதும் இந்த விஞ்ஞானிகளின் ஆய்வில் மூலம் கிடைத்த தகவலாகும்.
எனினும், உடல்பருமன் கொண்டவர்களில் எத்தனை பேர் இறந்தனர் என்பது பற்றி இந்த ஆய்வில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
-வணக்கம் இலண்டனுக்காக ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-