ஆஸ்திரேலியாவின் குடிவரவுத் தடுப்பு மையங்களில் அலைப்பேசிகளை தடை செய்வது தொடர்பாக முன்மொழியப்பட்டுள்ள மசோதா அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாக இருக்கக்கூடும் என ஆஸ்திரேலியாவுக்கு செண்ட் குழுவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் இம்மசோதா தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய குடிவரவுத்துறை அமைச்சர் அலன் டஜ், தடுப்பு முகாம்களில் போதைப் பொருட்கள் மற்றும் தடைச்செய்யப்பட்ட பொருட்களின் பரவலைத் தடுக்க அலைப்பேசிகளை தடைச்செய்ய தனக்கும் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனுக்கும் இம்மசோதா அதிகாரமளிப்பதாக தெரிவித்திருந்தார் அலன் டஜ்.
இத்தடை தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கும் பொருந்தும் என மனித உரிமை அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன. இம்மசோதா தொடர்பாக அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையர், ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம், ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையம், ஆம்னெச்டி இண்டர்நேசனல் ஆகிய அமைப்புகள் கவலைத் தெரிவித்துள்ளன.
ஆஸ்திரேலிய செண்ட்டின் சட்ட மற்றும் அரசியலமைப்பு விவகாரங்கள் கமிட்டிக்கு இம்மசோதாவை ஆராய்ந்தது தொடர்பாக சமர்பித்துள்ள அறிக்கையில், தடுப்பில் உள்ள அகதிகளுக்கு அடிப்படைத் தேவைகளான தண்ணீர், உணவைப் போல அலைப்பேசிகளும் உயிர் காக்கக் கூடியவை.
தடுப்பில் உள்ளவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளக்கூடிய ஆபத்திலும் தங்களை அதிகம் வருத்திக்கொள்ளக்கூடிய ஆபத்திலும் உள்ளவர்கள் என ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம் குறிப்பிடுகிறது.
“தடுப்பில் உள்ளவர்களிடையே விரக்தி உணர்வுகளை அதிகரிக்கக்கூடிய நடவடிக்கையை எச்சரிக்கையுடன் முழுமையாக ஆராய வேண்டும்,” என செண்ட்டிற்கு சமர்பித்துள்ள அறிக்கையில் ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
அலைப்பேசிகளை தடைச்செய்யும் மசோதா தொடர்பான விவாதம் வரும் ஜூலை மாதம் செனட்டின் கமிட்டியின் முன்பு விவாதிக்கப்பட இருக்கிறது.