போலந்து ஜனாதிபதியாக அன்ட்ரெஜ் டுடா (Andrzej Duda) மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (12) நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், எதிர்த்து போட்டியிட்ட Rafal Trzaskowski ஐ சிறிதளவு வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று அவர் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.
ஐனாதிபதி டுடா, 51.2 வீத வாக்குகளை பெற்றுக்கொண்டதாக போலந்தின் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
1989 ஆம் ஆண்டு போலந்திலிருந்து கம்யூனிஸம் அகற்றப்பட்ட பின்னர் இடம்பெற்ற தேர்தல்களில், மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடப்பட்டது.