பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 12ஆம் தேதி டிஸ்கவரி சேனலில் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியின் Man vs Wild தொகுதிப்பாளரான பியர் கிரில்ஸுடன் உத்தரகண்ட் வனப்பகுதிக்குச் செல்லும்போது, இதுவரை கண்டிராத ஒரு அவதாரத்தில் காணப்படுவார்.
பியர் கிரில்ஸ், யாரும் செல்லாத காட்டுக்குள் சென்று பயணம் செய்வது, பாலைவனத்தில் நடப்பது, தண்ணீரில் குதிப்பது என அவரின் சாகசம் பிரமிக்க வைக்கும்.
இந்நிலையில், டிஸ்கவரி சேனல் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் படமாக்கப்பட்ட சிறப்பு அத்தியாயம் என கூறியுள்ளது.
கிரில்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், பிரதமர் மோடி ஒரு ஆற்றில் சவாரி செய்வதை காணலாம் என பதிவிட்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் என தெரிவித்துள்ளார்.
Man vs Wild ஆகஸ்ட் 12ஆம் தேதி திரையிடப்படும் என்றும், உலகெங்கிலும் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் டிஸ்கவரி நெட்வொர்க் சேனல்களில் காணலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக இந்நிகழ்ச்சி படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நன்றி – குமுதம்