கும்பகோணம் அருகேயுள்ள ஆடுதுறையில் மதுரை ஆதீனம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, நாட்டின் மீதான் அந்நிய நாட்டின் அச்சுறுத்தலை முறியடிக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கையில் மத்திய அரசு இரவு பகலாக தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற 100 நாளில், யாரும் துணிந்து செயல்படுத்த முடியாத அதிரடி திட்டங்களை மோடி செயல்படுத்தி வருகிறார். அவரது அனுபவமும், பொறுமையும்தான், அவரை தெளிவுடனும், சிறப்புடனும் செயல்பட வைக்கின்றன. உலக நாடுகளின் தலைவர்களுக்கு ரோல் மாடல் ஆக மோடி இருக்கிறார் என்றார்.