இந்திய கடற்பரப்பில் விபத்துக்கு உள்ளாகி கடலில் தத்தளித்த மீன்பிடி படகொன்றில் இருந்த 6 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர பாதுகாப்புப் படையினர் காப்பாற்றியுள்ளனர்.
தமிழகத்தின் சென்னையில் இருந்து 170 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ள கடற்பரப்பில் வைத்து இந்த மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
படகு விபத்துக்கு உள்ளான இடத்திற்கு அருகில் நேற்று சென்றுக்கொண்டிருந்த இந்திய வர்த்தக கப்பல் ஒன்றில் மூலம் இந்திய கடலோர பாதுகாப்புப் படையினர் இலங்கை மீனவர்களை காப்பாற்றியுள்ளனர்.
அப்போது இந்த இந்திய வர்த்தக கப்பல், விசாகப்பட்டணம் துறைமுகத்தை நோக்கி சென்றுக்கொண்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.