கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக, அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குகையில் உருவாகும் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம்.
இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று முன்பு அறிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக அந்த கோவிலை நிர்வகிக்கும் வாரியம் தெரவித்துள்ளது.
பக்தர்கள் இணையம் மூலம் சாமி தரிசனம் செய்யும் விதமாக நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 370வது சட்டப் பிரிவு நீக்கம் மற்றும் ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களை பிரித்ததன் காரணமாக பாதியிலேயே அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டது.